விருதுநகர் மாவட்டம் திருச்சுழியைச் சேர்ந்த பாஜக முன்னாள் மண்டல் செயற்குழு உறுப்பினர் சோலைச் செல்வம், அவரது தந்தை சோலையன் ஆகியோர் காரில் அருப்புக்கோட்டை-சாயல்குடி சாலையில் சென்று கொண்டிருந்தபோது, சாலையைக் கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தில் மோதாமல் இருக்க காரை திருப்பியதில் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த சோலைச் செல்வத்தின் தாய் விஜயலட்சுமி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். சோலைச் செல்வத்தின் மனைவி மற்றும் இரு மகள்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.