பணம் திருடிய இரு இளைஞர்கள் கைது

4பார்த்தது
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே சின்ன புளியம்பட்டி கிராமத்தில், பிரபு என்பவரின் வீட்டிற்கு வந்த இரு இளைஞர்கள், சாமி வந்துள்ளது என்றும், உங்கள் வீட்டில் கண்ணேறு பட்டுள்ளது என்றும் கூறி திருநீறு, தீர்த்தம் கொடுத்துள்ளனர். பின்னர், மாயாண்டி சாமி வந்துள்ளதாக கூறி, பிரபுவிடம் இருந்து ₹500 காணிக்கை பெற்றுள்ளனர். மேலும், ₹17,000 இருந்த பர்ஸை சோபாவில் வைத்துவிட்டு சென்றனர். சிறிது நேரத்தில் பர்ஸ் காணாமல் போனதை அறிந்த பிரபு, துரத்திச் சென்று இளைஞர்களைப் பிடித்துள்ளார். அவர்களிடம் இருந்து ₹17,000 பணத்துடன் பர்ஸ் மீட்கப்பட்டு, இளைஞர்கள் மல்லாங்கிணறு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி