முத்தாலம்மன் கோவில் வைகாசி பொங்கல் திருவிழா

0பார்த்தது
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் வைகாசி பொங்கல் திருவிழா பக்தி பரவசத்துடன் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இத்திருவிழாவில் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, பாரம்பரிய முறையில் கோவில் பூசாரி வீட்டில் முத்தாலம்மன் சாமி சிலை உருவாக்கப்பட்டு, அதற்கு தங்க நகைகள் மற்றும் வண்ணமயமான அலங்காரங்கள் அணிவிக்கப்பட்டன. தொடர்ந்து அம்மனுக்கு கண் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.