விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டத்தில் பணிபுரியும் 145 கிராம உதவியாளர்கள், தங்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கி 'டி' கிரேடில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகத்தில் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு தங்களது கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால், தேர்தல் பணியை புறக்கணிப்போம் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.