திருச்சுழி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசுவின் தனிப்பட்ட முன்னெடுப்பில் காரியாபட்டி யில் பெண்களுக்கான இலவச தொழிற்பயிற்சி முகாம் நடைபெற்றது. சிறுத்தொழில் பயிற்சி, உணவுப் பொருள் தயாரிப்பு, கைவினைப் பொருட்கள், செயற்கை நுண்ணறிவு பயன்பாடு, அழகியல் சார்ந்த பயிற்சி உள்ளிட்ட பல்துறை திறன் பயிற்சிகள் இதில் வழங்கப்பட்டன. 15 வயது முதல் 70 வயது வரையிலான பெண்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்ட இந்த முகாமில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இறுதியாண்டு பொறியியல் மாணவி கவித்ரிஷா, விடுமுறை நாட்களில் சோப் தயாரிப்பைக் கற்றுக்கொண்டது மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும், இதை ஒரு சிறு தொழிலாகவோ அல்லது பரிசாகவோ கொடுக்கலாம் என்ற உத்வேகம் பிறந்துள்ளதாகவும் தெரிவித்தார்.