தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 11 வட்டாரங்களில் காலியாக உள்ள 23 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்கள் நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பதவிக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தேர்ச்சி மற்றும் MS Office சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்கு மிகாமலும், SHG/PLF போன்றவற்றில் குறைந்தது 5 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பத்துடன் பிறந்த தேதி, பணி அனுபவம், கல்வித் தகுதி, சாதிச் சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களை இணைக்க வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத மற்றும் காலங்கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.