விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே சாட்சியாபுரத்தில் உள்ள சிதிலமடைந்த 72 அரசு அலுவலர் வாடகை குடியிருப்புகள் வசிக்க தகுதியற்ற நிலையில் உள்ளன. இவற்றை இடித்து அப்புறப்படுத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. இப்பணிக்கு அனுபவம் வாய்ந்தவர்கள் 06.11.2025 முதல் tntenders.gov.in இணையதளத்தில் ஏலம் எடுக்கலாம் என மதுரை வீட்டு வசதி பிரிவு செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.