அருப்புக்கோட்டையில் அரசு அங்கீகாரமின்றி இயங்கி வந்த தனியார் போலி கல்லூரியால் தங்களின் 3 ஆண்டு படிப்பும், எதிர்காலமும் வீணடிக்கப்பட்டுள்ளதாகக் கூறி பாதிக்கப்பட்ட 536 மாணவிகள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு வந்து கண்ணீருடன் மனு அளித்தனர். 'தமிழ்நாடு பெண்கள் கல்லூரி' என்ற பெயரில் கடந்த 2023-ல் படிப்பில் சேர்ந்த தங்களுக்கு, கடந்த ஆண்டு கல்லூரிக்கு அரசு அங்கீகாரம் இல்லை என்பது தெரியவந்ததாக மாணவிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.