விருதுநகர் தேசபந்து மைதானத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில், சுதந்திரப் போராட்டத் தியாகியும் சிபிஐ மூத்த தலைவருமான நல்லகண்ணு மற்றும் விசிக முதன்மைச் செயலாளர் ஏ.சி. பாவரசு ஆகியோரின் மறைவுக்கு மாவட்டச் செயலாளர் செந்தில் தலைமையில் ஏராளமானோர் மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தினர். இந்த அஞ்சலி நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.