விருதுநகரில் அதிமுக சார்பில் இரத்ததான முகாம்

66பார்த்தது
அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளை முன்னிட்டு விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையுடன் இணைந்து முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி தலைமையில் மாவட்டம் முழுவதும் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் 1500 க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்டோர் கலந்து ரத்ததானம் வழங்கினர். விருதுநகரில் நடைபெற்ற முகாமை தொடங்கி வைத்தார். ரத்ததானம் தான் சிறந்தது. அதுவும் போர்க்காலங்களில் இன்றியமையாதது. இங்கு வழங்கப்படும் ரத்தம் முக்கியமானது, குறிப்பாக ராணுவ வீரர்கள் மற்றும் காயம்படும் பொதுமக்களுக்கு தேவைப்படலாம் என்றும் இரத்ததானம் வழங்குவதன் மூலம் நமது நாட்டுப்பற்றை தெரிவிப்போம் என்றார்.

தொடர்புடைய செய்தி