விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் திட்டச் செயல்பாடுகள் குறித்து அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாண்புமிகு அமைச்சர் செல்வி ச. கீர்த்தனா தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் மரு. என். ஓ. சுகபுத்ரா, இ. ஆ. ப. மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் என். ஸ்ரீநாதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த முன்னேற்றங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.