விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தலைமையில் அதிமுக மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். இதில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பணியாற்றுவது குறித்தும், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் 100 நாள் வேலைத் திட்டம் குறித்து பொதுமக்களிடம் பொய்யான பரப்புரையில் ஈடுபடுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் 13ஆம் தேதி அனைத்து ஒன்றிய அலுவலகங்கள் முன்பும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும், இது குறித்த ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.