விருதுநகர் மாவட்டம் வளையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெரிய கருப்பன், முத்து சிவலிங்கபுரம் பகுதியில் ஆடு மேய்க்கச் சென்றபோது, எதிர்பாராத விதமாக அங்குள்ள கல்குவாரியில் தவறி விழுந்து உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த காவல் நிலைய போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.