குழந்தைகளுக்கான நடை விழிப்புணர்வு பேரணி நடைபெறவுள்ளது

451பார்த்தது
விருதுநகரில் நவம்பர் 14, 2025 அன்று தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் தலைமையில் 'குழந்தைகளுக்கான நடை - என் நாள், என் உரிமை' என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெறுகிறது. தேசபந்து மைதானத்திலிருந்து தொடங்கும் இந்தப் பேரணியில் குழந்தைத் திருமணம், பாலியல் வன்கொடுமை, குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு, கல்வியின் அவசியம் போன்றன குறித்து தெருக்கூத்து மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பத்திரிக்கையாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் இதில் பங்கேற்கலாம். பங்கேற்பாளர்கள் நீல நிற உடை அணிய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.