அணையில் மீன் பிடிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலி*

5பார்த்தது
விருதுநகர் அல்லம்பட்டி பகுதியைச் சேர்ந்த 31 வயது ஆட்டோ ஓட்டுநர் பால்பாண்டி, நண்பர்களுடன் குல்லூர் சந்தை அணைக்கு மீன் பிடிக்கச் சென்றார். இரவு முழுவதும் வீடு திரும்பாததால், உறவினர்கள் சந்தேகமடைந்து தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து 2 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, அணையில் மூழ்கி உயிரிழந்த பால்பாண்டியின் உடலை மீட்டனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சூலக்கரை காவல் நிலைய காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

தொடர்புடைய செய்தி