விருதுநகர் மாவட்டம், விருதுநகர் தாலுகா கன்னிச்சேரிபுதூர் ஆரம்ப அரசு சுகாதார நிலையத்தில் 22/05/2026 அன்று நடிகர் கார்த்திக் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு தம்பநாயக்கன்பட்டி கிராம மக்கள் இணைந்து தன்னார்வ ரத்ததான முகாம் மருத்துவர் ரூபன் தலைமையில் நடைபெற்றது. கார்த்திக் ரசிகர் மன்ற ரசிகர்கள் நடராஜன் அவர்களின் முன்னிலையில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டு ரத்ததான முகாமினை சிறப்பித்தனர். இந்த ரத்ததானம் இனி ஒவ்வொரு வருடமும் நடைபெறும் என நடராஜன் தெரிவித்தார்.