விருதுநகரில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இன்று ஒரு நகைக்கடையை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'வடசென்னை 2' படம் குறித்து இயக்குநர் வெற்றிமாறனிடம் கேட்க வேண்டும் என்றும், கண்டிப்பாக எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். நடிகர் விஷால், அமைச்சர் பதவி அனுபவம் உள்ளவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று கூறிய கருத்து குறித்து கேட்டதற்கு, "அவர்கள் முடிவெடுக்கிறார்கள். அந்த முடிவில் நாம் எதுவும் சொல்ல முடியாது" என்று பதிலளித்தார். திரைத்துறைக்கு அனுபவம் உள்ள முதலமைச்சர் அந்தத் துறையை தாங்களே வைத்திருக்கலாம் என நடிகர் விஷால் கூறிய கருத்துக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.