விருதுநகரில் தேர்தல் பரப்புரையின் போது பேசிய நடிகை விந்தியா, 'குரங்குக்கு கோட்டு போடுவதும் திமுகவிற்கு ஓட்டு போடுவதும் ஒன்று' என விமர்சித்தார். விருதுநகர் மேற்கு மாவட்ட கழகக் கொள்கை பரப்பு துணைச் செயலாளரான நடிகை விந்தியா, விருதுநகர் எம்ஜிஆர் சிலை அருகே, விருதுநகர் தொகுதி அதிமுக வேட்பாளர் V. G கணேசனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.