சாத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு குருசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் இளங்கோவன், ஏழாயிரம்பண்ணை இன்ஸ்பெக்டர் குமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழன் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் மணிகண்டன் வரவேற்றார். துணை சூப்பிரண்டு குருசாமி, பட்டாசு ஆலைகளில் உரிமம் பெற்ற பட்டாசுகள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்றும், உற்பத்தி செய்யும் போது தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும், சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.