அதிமுக சார்பில் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஆய்வுக் கூட்டம்

3பார்த்தது
விருதுநகர் அருகே கோட்டூர் பகுதியில் அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அதிமுக சார்பில் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் பயிற்சி மற்றும் ஆய்வுக் கூட்டம் விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர் கே ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் நாகராஜன், முகவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் வாக்காளர் திருத்த பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினார். மேலும், ஒவ்வொரு முகவரின் பணிகளும் தனித்தனியாக ஆராயப்பட்டன. எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளர் விமல் குருசாமி மற்றும் ஒன்றிய கழகச் செயலாளர்கள் தர்மலிங்கம், கண்ணன், கலைவாணன் ஆகியோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி