அரசை கண்டித்து பேரணி பேரணிக்கு ஆதரவு தெரிவித்த அதிமுகவினர்

295பார்த்தது
விருதுநகரில் தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், திமுக தேர்தல் வாக்குறுதிப்படி வருவாய் கிராம உதவியாளருக்கு உள்ளது போல் சிறப்பு பென்ஷன் திட்டமான 6750 ஐ அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு தேசிய மருத்துவக் காப்பீடு, ஈமச்சடங்கு நிதி 25000 வழங்க வேண்டும், மே மாதம் அங்கன்வாடிகளுக்கு கோடை விடுமுறை அளிக்க வேண்டும், தற்காலிகப் பணிநீக்க காலங்களுக்கு பிழைப்பூதியம் வழங்க வேண்டும், தேர்வுநிலை, சிறப்பு நிலைக்கு இரண்டு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 12ம் நாளான இன்று தமிழக அரசுக்கு எதிராக 500க்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதற்கு அதிமுக சார்பில் ஆதரவு தெரிவிக்கப்பட்டது. இந்தப் பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று தேசபந்து மைதானத்தில் முடிவடைந்தது.

தொடர்புடைய செய்தி