சுதந்திரப் போராட்ட தியாகியும், சிபிஐ கட்சியின் முதுபெரும் தலைவருமான அய்யா நல்லகண்ணு அவர்கள் கடந்த 25ஆம் தேதி சென்னை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு விருதுநகர் தேசபந்து மைதானத்தில் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திமுக, காங்கிரஸ், தமிழக வெற்றிக்கழகம், மக்கள் நீதிமய்யம், ஆம் ஆத்மி, மதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சி சார்பில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கருப்பு பேஜ் அணிந்து மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தினர்.