விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 135.00 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. புயலின் காரணமாக கனமழை பெய்து வரும் நிலையில், திருச்சுழி பகுதியில் 0 மி.மீ., ராஜபாளையத்தில் 3 மி.மீ., காரியாபட்டியில் 1.20 மி.மீ., ஸ்ரீவில்லிபுத்தூரில் 29 மி.மீ., விருதுநகரில் 4.10 மி.மீ., சாத்தூரில் 2.30 மி.மீ., சிவகாசியில் 88 மி.மீ., பெரியார் பிளவுகள் பகுதியில் 1.20 மி.மீ., வத்திராயிருப்பில் 4.60 மி.மீ., கோவிலாங்குளம் பகுதியில் 1.60 மி.மீ., வெம்பக்கோட்டையில் 0 மி.மீ., மற்றும் அருப்புக்கோட்டையில் 0 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.