விருதுநகர் மாவட்டத்தில் சராசரியாக 55.61 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சிவகாசியில் அதிகபட்சமாக 99 மி.மீ மழை பெய்துள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் அறிக்கையின்படி, விருதுநகரில் 44 மி.மீ, சாத்தூரில் 39.2 மி.மீ, ராஜபாளையத்தில் 54 மி.மீ, காரியாபட்டி பகுதியில் 59.80 மி.மீ, ஸ்ரீவில்லிபுத்தூரில் 58.40 மி.மீ, பெரியார் பிளவுக்கள் பகுதியில் 46.20 மி.மீ, வத்திராயிருப்பு பகுதியில் 55.40 மி.மீ, கோவிலாங்குளம் பகுதியில் 59.80 மி.மீ, வெம்பக்கோட்டை பகுதியில் 58.50 மி.மீ, அருப்புக்கோட்டையில் 57 மி.மீ மற்றும் திருச்சுழி பகுதியில் 36 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மாவட்ட முழுவதும் மொத்தம் 667.30 மி.மீ மழை பதிவாகியுள்ளது.