விருதுநகர்: பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி

65பார்த்தது
விருதுநகர் அரசு உதவி பெறும் ஆண்கள் நடுநிலைப் பள்ளியில் இருந்து தனியார் ஆங்கில மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் மற்றும் லயன்ஸ் கிளப் ஆப் விருதுநகர் இணைந்து நடத்திய இந்தப் பேரணியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ மாணவிகள், அப்துல் கலாம், அன்னை தெரசா, விவசாயி, மருத்துவர், செவிலியர், பாரதமாதா, ஆசிரியர், வழக்கறிஞர், காவல்துறை உயிர் காப்போம், விடை சிறிது விதை பெரிது, பேரிடர் மீட்புப் பணிகள் செய்வோம், மனிதநேய உதவிகள் புரிவோம், பார்வை இழந்தவர்களுக்கு உதவிடுவோம், பசிப்பிணியை ஒழிப்போம், ரத்ததானம் செய்வோம், குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டமே போக்சோ சட்டம், நெகிழியை ஒழிப்போம், நம் பூமியை காப்போம், துணி பையை உபயோகித்து இயற்கையை காப்போம், பிளாஸ்டிக் தவிர்ப்பில் சுற்றுச்சூழலை காப்பீர், பிளாஸ்டிக் தீமையிலிருந்து நம் மண்ணையும் நம் மக்களையும் காப்போம் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த பேரணியில் கலந்து கொண்டனர். இந்தப் பேரணியானது விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஆரம்பித்து, மாரியம்மன் கோவில், மெயின் பஜார், தெப்பம், மேலத்தெரு மற்றும் நகரின் முக்கிய வீதி வழியாக வந்து மீண்டும் அதே பள்ளியில் முடிவடைந்தது.