கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

1பார்த்தது
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் எஸ்தர் ராணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதிப்படி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக மாற்றி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி 10 லட்சம் ரூபாய் பணிக்கொடை வழங்க வேண்டும், அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, கைபேசியில் டார்ச் லைட்டை எரிய விட்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி