விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே வடகரை பகுதியில் யுவராஜ் பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட வெடிவிபத்தில் ஏற்கனவே கல்குறிச்சியை சேர்ந்த செளண்டம்மாள் (54), தண்டியனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா, கணேசன் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் மேலும் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த தண்டியனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த பேச்சியம்மாள் (43) என்பவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. இதனையடுத்து பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.