தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நடைப்பயணம்

2பார்த்தது
தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நடைப்பயணம்
இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பில், சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் தேசிய ஒற்றுமை தின விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக, மேரே யுவா பாரத் கேந்திரா, விருதுநகர் சார்பில், AAA பொறியியல் கல்லூரி ஆமத்தூர் முன்பாக விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெற்றது. மாவட்ட இளைஞர் அலுவலர் ஞானச்சந்திரன் வரவேற்புரை வழங்கினார். சர்தார் வல்லபாய் படேல் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மை பாரத் கேந்திராவின் முன்னாள் மாநில இயக்குனர் சடாச்சரவேல் அவர்கள் உறுதிமொழி ஏற்று, கொடியசைத்து இந்நிகழ்வினை துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் முனைவர் சேகர், மாவட்ட விளையாட்டு அலுவலர் குமர மணிமாறன், சமுதாய நல அலுவலர் முனைவர் ராஜ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். எட்டு கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற இந்த நடைப்பயணத்தில் சுமார் 600 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி