ஆலமர அமைப்பின் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது

1பார்த்தது
விருதுநகர் மாவட்டம், புல்லலக்கோட்டை சாலையில் உள்ள நுண்உரம் தயாரிப்பு மையத்தில், விருதுநகர் நகராட்சி, லியோ கிளப் மற்றும் பசுமை படை மாணவர்கள் இணைந்து நடத்தும் ஆலமரம் அமைப்பின் 248வது வார விழாவில், மாவட்ட ஆட்சியர் மரு. என். ஓ. சுகபுத்ரா 1000 மரக்கன்றுகள் மற்றும் 5000 பனைமர விதைகளை நடவு செய்யும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். வனப்பகுதிகளை அதிகரிக்கும் நோக்கத்துடன் நடைபெறும் இந்த நிகழ்வில், பனை மரங்களின் மருத்துவ குணங்கள் மற்றும் மாணவர்களின் எதிர்கால நலன் குறித்து ஆட்சியர் வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி