தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ஒப்பனை மற்றும் அழகுக்கலை பயிற்சிகளை வழங்குகிறது. இப்பயிற்சிக்கு ஆதிதிராவிடர்/பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த 18-35 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி முடிந்ததும், தகுதியானவர்களுக்கு மாதம் ரூ. 18,000 முதல் ரூ. 25,000 வரை ஊதியத்தில் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.