விருதுநகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காளையார் குறிச்சியில் பாஜக மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் கிழக்கு மாவட்ட தலைவர் பென்டகன் ஜி பாண்டுரங்கன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரன், வர்த்தக பிரிவு மாநில செயலாளர் காமாட்சி, சிறுபான்மையினர் அணி மாநில செயலாளர் பிரான்சிஸ், மாவட்ட பொதுச் செயலாளர் திருமதி. காளீஸ்வரி, ஒன்றிய தலைவர் திரு. பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.