விருதுநகரில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் பென்டகன் ஜி பாண்டுரங்கன் பேசுகையில், மத்திய அரசு 100 நாள் வேலை திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தியுள்ளதாகவும், பணிபுரிவதற்கான ஊதியம் ஏழு நாட்களுக்குள் கிடைக்க புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். திமுக அரசு இந்த திட்டத்தின் கீழ் பல முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், திட்டத்தின் பெயர் மாற்றம் குறித்து அவர் விளக்கினார். தற்போது மோடி அவர்கள் 'வளர்ச்சி அடைந்த பாரதம்' என பெயர் மாற்றம் செய்துள்ளதாகவும், ஆனால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் 100 நாள் வேலை திட்டத்தை பாஜக நிறுத்திவிட்டதாக பொய் பிரச்சாரம் செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், மகளிர் உரிமைத் தொகையில் இந்த மாதம் 5000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.