2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, விருதுநகர் கிழக்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் வாக்காளர் சிறப்புத் திருத்தப் பயிற்சி முகாம் மற்றும் வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கான பயிலரங்க கூட்டம் மாவட்ட தலைவர் பென்டகன் ஜி பாண்டுரங்கன் தலைமையில் நடைபெற்றது. இதில் பாஜக மாநில பொதுச்செயலாளர் பொன் பாலகணபதி மற்றும் கன்னியாகுமரி முன்னாள் மாவட்டத் தலைவர் தர்மராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு வழிகாட்டினர்.