விருதுநகர் தேசபந்து மைதானத்தில் பாஜக விருதுநகர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட மகளிர் அணியினர், தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் மது, கஞ்சா, போதைப் பொருள் பயன்படுத்துவது போன்ற சம்பவங்கள் நிகழ்வதைச் சுட்டிக்காட்டி, பெண்களின் பாதுகாப்பைத் தடுக்கத் தவறிய திமுக அரசை பாஜகவினர் கண்டித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன், மேற்கு மாவட்ட தலைவர் சரவணத்துறை மற்றும் ஏராளமான பாஜக நிர்வாகிகள் கலந்துகொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.