விருதுநகர் அருகே பட்டம்புதூரில் திருவனந்தபுரத்திலிருந்து திருச்சி சென்ற இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி மூன்று பெண்கள் உயிரிழந்தனர். அவர்கள் ரயிலில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது தண்டவாளத்தை கடக்கும்போது ரயில் மோதி இறந்தார்களா என்பது குறித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த மூன்று பெண்களின் அடையாளம் இதுவரை கண்டறியப்படவில்லை.