விருதுநகரில் மன நலம் பாதிக்கப்பட்ட நாகேந்திரன் என்பவர் கழிவுநீர் கால்வாயில் மர்மமான முறையில் இறந்து கிடந்த நிலையில், அவரது உடல் மீட்கப்பட்டது. தலையில் தாக்கி தள்ளிவிட்டதாக சந்தேகிக்கப்படும் இந்த சம்பவம் குறித்து, பஜார் போலீசார் மோப்பநாய் மற்றும் சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த நபர் தினமும் இரவில் ஊரை சுற்றி திரிந்தவர் என தெரிய வந்துள்ளது.