விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் மரு. என். ஓ. சுகபுத்ரா. , இ. ஆ. ப. , தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர். கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டத்தைச் சீரிய முறையில் செயற்படுத்தி, தமிழ்நாட்டை கொத்தடிமைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக உருவாக்குவதற்கு சிறப்புடன் செயல்படுவேன் என ஆட்சியர் உறுதிமொழி ஏற்க, அதைத் தொடர்ந்து விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.