இளைஞரை தாக்கிய ஊராட்சி செயலர் மீது வழக்குப் பதிவு

2பார்த்தது
விருதுநகர் அருகே செங்குன்றாபுரம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், சமூக ஆர்வலர் முத்துக்குமார் தணிக்கை அறிக்கையை பொதுமக்களுக்கு காட்டக் கோரியபோது, ஊராட்சி மன்ற செயலாளர் முத்துவேல் அவரைத் தாக்கி செல்போனைப் பறிக்க முயன்றார். இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. காயமடைந்த முத்துக்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே, கேள்வி கேட்ட இளைஞரைத் தாக்கிய ஊராட்சி செயலர் முத்துவேல் மீதும், அதிகாரிகளைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகக் கூறி முத்துக்குமார் மீதும் ஆமத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி