டூவிலர் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது

0பார்த்தது
விருதுநகரில் தெருக்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை இரண்டு இளைஞர்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதிய இடவசதி இல்லாததால் தந்திமர தெருவில் மக்கள் தங்கள் இருசக்கர வாகனங்களை தெருவில் நிறுத்தி வைப்பது வழக்கம். நள்ளிரவில் வந்த இரு இளைஞர்கள், வாகனங்களின் லாக்கரை உடைத்து திருடிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.