விருதுநகர் அரசு தொழிற்பயிற்சி மையத்தில், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் நாஷா முக்த் பாரத், குஷால் பாரத் திட்டத்தின் கீழ், நாஷா முக்த் பாரத் அபியானின் 5 ஆண்டு கொண்டாட்டம் மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகத்திற்கு எதிரான உறுதிமொழி நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் மீனாட்சி முன்னிலையில், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் "போதைப்பொருள் இல்லா நாட்டை உருவாக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்" என உறுதிமொழி ஏற்றனர்.