விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அரசுப்பள்ளி மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் 'திசை' திட்டத்தின் இலச்சினை மாவட்ட ஆட்சியர் மரு. என். ஓ. சுகபுத்ரா அவர்களால் வெளியிடப்பட்டது. இந்தத் திட்டம், தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT), இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (IIT) மற்றும் பிற பொறியியல் கல்லூரிகளில் இளங்கலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்காக நடைபெற்ற அகில இந்திய நுழைவுத் தேர்வு (JEE) பயிற்சி வகுப்பின் நிறைவையொட்டி தொடங்கப்பட்டது. மேலும், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத் தொகுதி-IV தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ், கேடயங்கள் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டன. காவலர் தேர்வில் வெற்றி பெற்று உடற்தகுதித் தேர்வுக்குத் தயாராகும் 25 மாணவர்களுக்கு ஊட்டச்சத்துப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகளையும் ஆட்சியர் வழங்கினார்.