விருதுநகர்: காஃபி வித் கலெக்டர் நிகழ்ச்சியின் 154 கலந்துரையாடல்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சிவகாசி AAA பொறியியல் கல்லூரியில் பயிலும் 60 மாணவர்களுடன் நடைபெற்ற "Coffee With Collector" என்ற 154 ஆவது கலந்துரையாடல் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியதலைவர் ஜெயசீலன் மாணவர்களுடன் கலந்துரையாடி, கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.
விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ / மாணவியர்களுடன் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணவர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சியதலைவர் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று (மார்ச் 12) 154-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.