விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், ஆவியூர் ஊராட்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மாவட்ட ஆட்சியர் மரு. என். ஓ. சுகபுத்ரா, இ. ஆ. ப. அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. தனியார் மருத்துவமனைகளில் ரூ. 15,000 வரை செலவாகும் முழு உடல் பரிசோதனைகள் இங்கு இலவசமாக செய்யப்படுகின்றன. நோய் கண்டறியப்பட்டால், அதற்கான சிகிச்சைகளும் மருந்துகளும் இலவசமாக வழங்கப்படும். விருதுநகர் மாவட்டத்தில் 36 முகாம்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு நடைபெற்று வரும் நிலையில், ஆவியூரில் 31 ஆவது முகாம் நடைபெற்றது. முகாமில் மருத்துவ காப்பீடு அட்டைகள், தொழிலாளர் நல வாரிய அட்டைகள், மாற்றுத் திறனாளி அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. தேசிய குடற்புழு தினத்தையொட்டி, குடற்புழு உறுதிமொழி ஏற்கப்பட்டதுடன், மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன.