கோடை விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், விருதுநகர் நகராட்சி முஸ்லிம் நடுநிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா இன்று ஆய்வு மேற்கொண்டார். மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஆட்சியரின் உத்தரவின் பேரில் துறை அலுவலர்களும் ஆய்வு நடத்தினர். பள்ளிகள் திறப்புக்கு முன் கல்வி, பாதுகாப்பு, சுகாதாரம், மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு, நோட்டுப் புத்தகங்கள் போன்ற அடிப்படை தேவைகள் சரியாக உள்ளதா என்றும், பள்ளி வளாகங்களில் தூய்மை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.