விருதுநகர் மாவட்டத்தில் ஆண்களுக்கான தழும்பில்லா நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை குறித்த இரு வார விழிப்புணர்வு முகாம் நடைபெற்று வருகிறது. இதையொட்டி, மாவட்ட குடும்பநல செயலகத்தின் சார்பில் விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த வாகனம் மாவட்டம் முழுவதும் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும். தழும்பில்லா கருத்தடை சிகிச்சை முறையை தேர்ந்தெடுக்கும் ஆண்களுக்கு அரசு உதவித்தொகை ரூ. 1100 மற்றும் மாவட்ட ஆட்சியரின் சிறப்பு ஊக்கத்தொகை ரூ. 3900 என மொத்தம் ரூ. 5000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.