விருதுநகர் ஜெய் ரெசிடென்சியில் சென்னை அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி, விருதுநகர் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, சேலம் தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரிய பயிற்சி மையம் சார்பில் சிறுதானிய இயக்கம் - விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கான சிறுதானியங்கள் மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்த பணிமனை கருத்தரங்கு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என். ஓ. சுகபுத்ரா அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறுதானியங்களின் முக்கியத்துவம், அவற்றை மதிப்பு கூட்டி சந்தைப்படுத்துவது குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டன.