விருதுநகர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாகவும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று கனமழைக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டதன் அடிப்படையிலும், மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா இன்று ஒரு நாள் மட்டும் விருதுநகர் மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார். இந்த விடுமுறை அறிவிப்பு மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.