கல்லூரி பேராசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

484பார்த்தது
தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கு 2021 ஆம் ஆண்டு அரசாணைப்படி பணி மேம்பாடு மற்றும் ஊதிய உயர்வு வழங்கப்பட்ட நிலையில், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கு வழங்கப்படவில்லை. இது குறித்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், அரசு ஊழியர் சங்கத்துடன் இணைந்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தமிழக அரசின் உயர்கல்வித் துறையின் பிரித்தாளும் போக்கைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நிலுவையில் உள்ள பணப்பலன்களை உடனடியாக வழங்கக்கோரியும், இந்த மாத ஊதியத்தில் அதைச் சேர்க்கக் கோரியும் பேராசிரியர்கள் வலியுறுத்தினர்.