ஈரான் தாக்குதலை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

9பார்த்தது
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது போர் தொடுத்து வருவதைக் கண்டித்து, விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விருதுநகர் நகர செயலாளர் தோழர் பாண்டியன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் தோழர் ஜெயபாரத் ஆகியோர் கூட்டாக இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினர். தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்ட செயலாளரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினருமான தோழர் பழனிக்குமார் கண்டன உரையாற்றினார்.

தொடர்புடைய செய்தி