முன்னாள் முதல்வர் கே. காமராஜர் குறித்து யூடியூப் நேரலையில் அவதூறாகப் பேசிய சமூக ஊடகவியலாளர் முக்தார் அப்பாஸ் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரி விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் காங்கிரஸ் கட்சியினர் மனு அளித்துள்ளனர். காமராஜர் கள்ள நோட்டு அடிக்க துணை புரிந்தார், கலப்படம் செய்பவர்களுக்கு துணை நின்றார் என பொய்யான தகவல்களைப் பரப்பியதாகக் கூறப்படுகிறது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், தேசிய தலைவரை அவமதித்தல், பொய் பரப்புரை செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரப்பட்டுள்ளது.